போக்குவரத்துக்கு தயாரானது புதிய பாம்பன் ரயில் பாலம்
போக்குவரத்துக்கு தயாரானது புதிய பாம்பன் ரயில் பாலம்
ADDED : டிச 28, 2024 03:20 AM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்ல பாம்பன் ரயில் பாலம் முக்கிய வழித்தடமாக இருந்தது. கடந்த 1914ல் கட்டப்பட்ட இப்பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை எனக்கூறி, புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் 2019ல் துவக்கியது.
ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது, 545 கோடி ரூபாய் செலவில், 101 துாண்களுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட முதல் செங்குத்து துாக்கு பாலம் என்ற பெருமையோடு, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்துள்ளன.
இப்பாலத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில், மணிக்கு 80 முதல், 90 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். முன்னதாக, நவ., 28ல் பாதுகாப்பு ஒப்புதல் அறிக்கை வெளியிட்டார். புதிய பாலத்தில் 75 கி.,மீ., வேகத்திலும், நடுவில் 72 மீட்டர் நீளமுள்ள துாக்கு பாலத்தில், 50 கி.மீ., வேகத்திலும்
தொடர்ச்சி 11ம் பக்கம்
- நமது நிருபர் -

