ADDED : பிப் 20, 2024 01:04 AM
'குடிசைகள் இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை அடையும் நோக்கில், ஊரக பகுதிகளில், 2030க்குள், எட்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான, 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
முதல்கட்டமாக, 2024 - 25 நிதி ஆண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் கீழ், 2024 - 25 நிதியாண்டில், 2,482 கிராம ஊராட்சிகளில், 1,147 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்
ஊரக பகுதிகளில் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றிவிட்டு, 2,000 புதிய தொட்டிகள் கட்டும் திட்டம், 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
மாநகராட்சிகளை அடுத்துள்ள விரிவாக்க பகுதிகளில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
வரும் நிதியாண்டில், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5,000 நீர்நிலைகளை புனரமைக்கும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த, 2024 - 25ம் நிதியாண்டில், 3,300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து லட்சம் ஏழை குடும்பங்கள், வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படும். இதன்படி, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, 'முதல்வரின் தாயுமானவர்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி துறை திட்ட பணிகளுக்காக, 27,922 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

