ஜவுளித்துறை ஆராய்ச்சிக்கு ரூ.305 கோடியில் புதிய திட்டம்
ஜவுளித்துறை ஆராய்ச்சிக்கு ரூ.305 கோடியில் புதிய திட்டம்
ADDED : நவ 29, 2025 12:18 AM

புதுடில்லி ஜவுளி துறையில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு, மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஜவுளித்துறையில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்க, டெக்ஸ்-ராம்ப்ஸ் எனும் புதிய திட்டம் 305 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறையில் ஆராய்ச்சி, மதிப்பீடு, கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் புத்தொழில் ஆகியவை இதன் நோக்கங்கள்.
இது, 2025 - -26 முதல் 2030 - -31 நிதியாண்டு வரை நடைமுறையில் இருக்கும். எதிர்வரும் நிதி ஆணையத்தின் காலம் வரை செயல்பாட்டில் இருக்கும். இதற்கான நிதியை மத்திய ஜவுளி அமைச்சகம் வழங்க இருக்கிறது. இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையை எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவது என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

