விருதுநகரில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா; நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகரில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா; நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்
UPDATED : நவ 27, 2025 12:28 PM
ADDED : நவ 27, 2025 12:06 AM

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் நிலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு, 'சிப்காட்' அழைப்பு விடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா எனப்படும், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் பூங்காவை, 1,052 ஏக்கரில், 'சிப்காட்' அமைக்கிறது. அங்கு, 1,894 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு பணிகள், கழிவு சுத்திகரிப்பு நிலையம், தொழிலாளர் தங்கும் விடுதி, சுகாதார மையம், திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இந்த பூங்கா வாயிலாக, அதிக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 600 ஏக்கர் நிலத்தை ஆலைகள் அமைப்பதற்காக, தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியில் சிப்காட் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் சிப்காட் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் துவங்கிஉள்ளது.

