ADDED : நவ 18, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;கடந்த அக்., மாதத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, 9,455 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; அமெரிக்க வரி உயர்வால், கடந்த ஆண்டு இதே மாதத்தை காட்டிலும் இது 8.20 சதவீதம் குறைவு.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''ஆகஸ்டு மாத இறுதியில், அமெரிக்க வரி உயர்த்தப்பட்டது. அதற்கு பின்னர் தான், ஆர்டர் பெறுவதும், முடித்த ஆர்டர்களை அனுப்புவதும் பாதிக்கப்பட்டது.
அதன் எதிரொலியாக, அக்டோபர் மாத ஏற்றுமதி சற்று குறைந்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க ஆர்டர் மட்டும் குறைந்திருக்கிறது. மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மத்திய அரசின், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் அமலுக்கு வரும் போது, அந்த சலுகைகளை கொண்டு போட்டியை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்'' என்றார்.

