தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இந்துக்களுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம்

இந்துக்களுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம்

இந்துக்களுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம்


ADDED : நவ 21, 2026 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 02:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்துக்களுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம்

–பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்

திருப்பரங்குன்றத்தில் நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றினர். 70 ஆண்டுகளாக பல ஆதிக்க சக்திகளின் நிலைப்பாடு காரணமாக தீபத்துாணில் தீபம் ஏற்ற முடியவில்லை. அது முறியடிக்கப்பட்டு இந்துக்களுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்துள்ளது. இதற்கு அடிப்படை மதுரையில் நடந்த முருகப்பெருமான் மாநாடு, இந்துக்கள் கூட்டு வழிபாடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்குடநன்னீராட்டும் காரணமாகும். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும். தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள், வெகுசிலர் மட்டுமே அங்கு சென்று தீபம் ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர். அடுத்து வரும் ஆண்டில் அனைவரும் சென்று வழிபாடு செய்யும் நிலை ஏற்பட வேண்டும் . இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அரசு முன் வர வேண்டும்

–சிரவைஆதினம் குமரகுருபர சுவாமிகள்

திருப்பரங்குன்றம் பிரச்னையில் உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக முருக பக்தர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வரும் நவ.,24 ம் தேதி கார்த்திகை தீபத்தன்று மலையின் மீது தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு பாராட்டு. அறநிலையத்துறையை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே அங்கு சென்று தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அரசு இதை நல்ல முறையில் செயல்படுத்தும் என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றனர். அதை செயல்படுத்துவதற்கு அரசு முன் வர வேண்டும் .

நுாற்றாண்டு போராட்டம்

–நாகசக்தி அம்மன் தியான பீடம் விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள்உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை ஐகோர்ட் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தும் தி.மு.க., அரசு தடை செய்தது. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும் என்பதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுக்க உள்ள முருக பக்தர்கள் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆறுபடை வீடுகளில் முதல் படையாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

பெரும்பான்மை மக்களின் உணர்வு

–புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபமேற்ற அனுமதி கொடுத்திருப்பதை முழு மனதுடன் வரவேற்கிறோம். கடந்தாண்டு மாநில அரசின் முடிவால், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீபம் ஏற்ற இயலவில்லை. அதுபோல் இம்முறையும் அரசு நடவடிக்கை எடுக்காமல், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதித்து, தீபமேற்ற எதிர்ப்பு தெரிவிக்ககூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us