sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திண்டுக்கல் வழியாக பாலக்காடுக்கு புதிய ரயில் புனலுார் -- மதுரை ரயிலையும் விழுப்புரம் வரை நீட்டிக்க அனுமதி

/

திண்டுக்கல் வழியாக பாலக்காடுக்கு புதிய ரயில் புனலுார் -- மதுரை ரயிலையும் விழுப்புரம் வரை நீட்டிக்க அனுமதி

திண்டுக்கல் வழியாக பாலக்காடுக்கு புதிய ரயில் புனலுார் -- மதுரை ரயிலையும் விழுப்புரம் வரை நீட்டிக்க அனுமதி

திண்டுக்கல் வழியாக பாலக்காடுக்கு புதிய ரயில் புனலுார் -- மதுரை ரயிலையும் விழுப்புரம் வரை நீட்டிக்க அனுமதி

2


ADDED : செப் 27, 2024 03:09 AM

Google News

ADDED : செப் 27, 2024 03:09 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல், பழநி வழியே பாலக்காடுக்கும், புனலுார் - மதுரை ரயிலை விழுப்புரம் வரைக்கும் நீட்டிப்பு செய்வதற்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல்தந்துள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8:50 மணிக்கு தஞ்சாவூருடன் நிறுத்தப்படுகிறது. இதே போல் பாலக்காடு டவுனில் மதியம் 2:45 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 7:10 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது. இவ்விரு ரயில்களையும் ஒருங்கிணைத்து தஞ்சாவூரில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியே பாலக்காடுக்கு மதியம் 2:40 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து 2:45க்கு புறப்பட்டு இரவு 7:10க்கு ஈரோடு சென்றடையும் வகையில் புதிய ரயில் இயக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக ஈரோட்டில் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 11:35 மணிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து காலை 11:40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியே மயிலாடுதுறைக்கு இரவு 8:30 மணிக்கு சென்றடையும்.

இதேபோல கேரள மாநிலம் புனலுாரில் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர் வழியே மதுரைக்கு அதிகாலை 3:00 மணிக்கு வரும் ரயிலை திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம் வழியே விழுப்புரத்திற்கு காலை 8:00 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வடமதுரை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில்'' ஏற்கனவே கடந்தாண்டு இறுதி வரை மதுரை- -விழுப்புரம் ரயிலாக இயக்கப்பட்ட ரயில் தற்போது சில மாதங்களாக திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு காலை 11:15 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது. புதிய நீட்டிப்பு ரயில் சேவை துவங்கும்போது திண்டுக்கல் - விழுப்புரம் ரயில் தொடர்ந்து இயங்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருச்சி பகுதியில் இருந்து பழநி பகுதிக்கு நேரடி ரயில் சேவை துவங்குவது வரவேற்கத்தக்கது ''என்றார்.






      Dinamalar
      Follow us