ADDED : ஜன 22, 2025 12:36 AM
அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, வரும் மார்ச் 22ல், 'டான்செட்' நுழைவுத்தேர்வு, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர, மார்ச் 23ம் தேதி, சீட்டா பி.ஜி., பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவுகள், ' https://tancet.annauniv.edu/tancet/index.html ' என்ற இணைய பக்கத்தில் வரும் 24ம் தேதி முதல் துவங்கும்.
அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க இருந்த, 'சிவில் சர்வீஸ் ஆளுமை தேர்வு 2024', அடுத்த மாதம், 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிப்., 5ம் தேதி டில்லி சட்டசபை தேர்தல் நடப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி, அடுத்து வரும் தேர்வுகளுக்கான விடைத்தாளில் மாற்றம் செய்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட, ஓ.எம்.ஆர்., மாதிரி விடைத்தாளை, அனைவரும் காண்பதற்காக, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.