ADDED : ஜன 31, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், உதவிப் பேராசிரியர் நியமனம் மற்றும், 'பிஎச்.டி.,' படிப்புகளில் சேருவதற்கான, சி.எஸ்.ஐ.ஆர்., நெட் மற்றும் யு.ஜி.சி, நெட் தேர்வுகள், வரும், 28ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெற உள்ளன. வரும், 28ம் தேதி கணித அறிவியல்; புவி அறிவியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கும், மார்ச் 1ல், உயிர் அறிவியல், மார்ச் 2ல் இயற்பியல் அறிவியல் பாடங்களுக்கும் தேர்வுகள் நடக்க உள்ளன.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல், மார்ச் 18ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரையும், பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.