ADDED : செப் 17, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடக்க கல்விக்கு பின், இடை நிற்றலை குறைக்கும் வகையில், நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும், தேசிய கல்வி உதவித்தொகைக்கு, உரிய ஆவணங்களுடன் ஒரு முறை பதிவை செய்து, வரும் 30ம் தேதிக்குள், https//scholarships.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலகாம்.
ஐ.ஐ.எம்., உள்ளிட்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான, 'கேட்' நுழைவுத் தேர்வு, நவ., 30ல் நடக்க உள்ளது. இதற்கு, வரும் 20ம் தேதி வரை, https://iimcat.ac.in எனும் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹி பிராந்திய அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள, 190 பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்களுக்கு, https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, அக்., 27க்குள் விண்ணப்பிக்கலாம்.

