ADDED : செப் 04, 2025 03:27 AM
இந்தியாவில் ஜி.எஸ்.டி., வரி கொடுமை தாங்க முடியவில்லை. திருச்சியை சேர்ந்தவர் தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதனால், திருச்சியைச் சேர்ந்தோர், மத்திய நிதி அமைச்சரிடம் பேச வேண்டும். வியாபாரிகளும், தொழில் துறையினரும், உற்பத்தியாளர்களும் ஜி.எஸ்.டி., வரியால் படும் துன்பத்தை எடுத்துச் சொல்லி, வரியை குறைக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கு நிதி பகிர்வு குறைவாக இருப்பதாக வெகு காலமாக குற்றச்சாட்டு உள்ளது. அதை, நிதி அமைச்சர் நினைத்தால், சரி செய்யலாம். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், சில மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதில், தமிழகத்துக்கு பலன் இருக்குமா என தெரியவில்லை. இருந்தாலும், தமிழக அரசு நிர்வாக செயல்பாட்டுக்கு ஏராளமான நிதி தேவை. மத்திய அரசு, உரிய முறையில் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அப்பாவு, தமிழக சபாநாயகர்