கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்
கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்
ADDED : மார் 11, 2025 06:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜமீன் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை நடத்தக்கோரி பரத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ' தங்கள் தலைமையில்தான் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது. கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும் உரிமை உள்ளது. திருவிழா குறித்து ஆண்டுதோறும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை ' என உத்தரவிட்டுஉள்ளது.