PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊருக்கு ஊர் ஆஸ்பத்திரி இல்லாத காலத்தில், பஸ்ஸை நடமாடும் மருத்துவமனையாக மாற்றி, கிராமம் கிராமமாக டாக்டரும் நர்சும் போய் வருவார்கள்.
நாளை மருத்துவ குழு வருகிறது அல்லது தடுப்பூசி போட வருகிறார்கள் என்றால் முந்தைய நாளே அந்த செய்தியை பளிச்சென தெரியும் வகையில் கிராமத்தின் பெயருடன் தினமலர் வெளியிடும். மறுநாளும் நினைவூட்டும். இதனால் அதிகாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சி. “தண்டோரா போடவே தேவையில்லை; தினமலர் பார்த்துக் கொள்ளும்” என்பார்கள்.
இன்றைக்கும் கூட மின்சாரம் தடைபடும், குடிநீர் வராது போன்ற தகவல்களை அந்தந்த துறை அதிகாரிகள் தினமலர் நிருபரை அழைத்து தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.