ADDED : ஜன 01, 2025 01:26 AM
சென்னை : 'இறால் பண்ணைகளில், மின் திருட்டு அதிகம் என்ற தகவல் தவறானது' என, தமிழக கடலோர மீன் வளர்ப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 2023 - 24ம் ஆண்டில், 20,087 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, 132 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இறால் பண்ணைகளில், மின் திருட்டு அதிகம் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக, கடந்த 27ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, தமிழக கடலோர மீன் வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரவிபாண்டியன் கூறியதாவது:
தமிழக கடலோர பகுதிகளில், இறால் பண்ணை தொழில்கள் அதிகம் நடக்கின்றன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், அதிக மின் கட்டணம் செலுத்துகின்றனர். இறால் பண்ணை தொழில் செய்வோர் மின் திருட்டில் ஈடுபடுவதில்லை. எனவே, இறால் பண்ணைகளில் மின் திருட்டு அதிகம் என்ற தகவல் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.

