ஆயுத பூஜைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கம்
ஆயுத பூஜைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கம்
UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 11:24 PM
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, தாம்பரம் – மானாமதுரை, எழும்பூர் – திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன் விபரம்:
சென்னை தாம்பரத்தில் இன்று மாலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு மானாமதுரை செல்லும். அங்கிருந்து நாளை காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வரும்
தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 11:00 மணிக்கு மானாமதுரை செல்லும். அங்கிருந்து வரும் 20ம் தேதி பகல் 2:45 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11:45 மணிக்கு தாம்பரம் வரும்
எழும்பூரில் இன்று இரவு 7:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 4:05 மணிக்கு திருச்சி செல்லும். திருச்சியில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு, பகல் 11:45 மணிக்கு எழும்பூர் வரும்
எழும்பூரில் நாளை இரவு 7:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 4:45 மணிக்கு திருச்சி செல்லும். திருச்சியில் வரும் 20ம் தேதி இரவு 10:45 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை 6:50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
