நேற்று நெல்லை; இன்று தென்காசி: தலை துண்டித்து விவசாயி படுகொலை
நேற்று நெல்லை; இன்று தென்காசி: தலை துண்டித்து விவசாயி படுகொலை
ADDED : டிச 21, 2024 09:53 AM

தென்காசி: நெல்லையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று (டிச.,21) தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபுள்ளையூரில் விவசாயி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லையில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?' என, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. நீதிமன்றம் முன் காலை நேரம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று காலை, 10:00 மணிக்கு நீதிமன்ற நேரத்தில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (டிச.,21) நெல்லைக்கு பக்கத்து மாவட்டமான, தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபுள்ளையூரில் விவசாயி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். போலீசார் உடலை மீட்டு, பிரதேச பரிசோதனை செய்ய, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயியை மர்மநபர்கள் கொலை செய்தது குறித்து, போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர். விரிவான விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும்.