சிறுநீரக முறைகேடு அங்கீகார குழுவிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'
சிறுநீரக முறைகேடு அங்கீகார குழுவிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'
ADDED : ஆக 27, 2025 10:45 PM
சென்னை:சிறுநீரக முறைகேடு தொடர்பாக, மதுரை மாவட்ட உறுப்பு மாற்று சிகிச்சை அங்கீகார குழுவிடம் விளக்கம் கேட்டு, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழக சுகாதார திட்ட இயக்குநர் வினித் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். முறைகேடாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த, இரண்டு தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறுநீரக முறைகேடு தொடர்பாக, மதுரை மாவட்ட உறுப்பு மாற்று சிகிச்சை அங்கீகார குழுவுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குழுவில் இடம் பெற்றுள்ள, சுகாதார அதிகாரிகள், டாக்டர்கள், தன்னார்வலர்கள் என, ஒன்பது பேருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில், ஒன்பது பேரிடமும் நேரடியாக விசாரணை நடத்தப்படும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

