தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 04, 2026 01:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 01:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே செங்களாகுடி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, 19. இவர் பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே செங்களாகுடி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, இவர் பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்தார். விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்றுமுன் தினம் இரவு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அவரது குடும்பத்தினருக்கு நர்சிங் கல்லூரி தரப்பில் இருந்து முறையான தகவல் தெரிவிக்காததால், மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே புதுக்கோட்டை-தஞ்சை சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் பேச்சுக்கு பின், சாலை மறியல் கைவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து, பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us