பழைய ஓய்வூதியம்: தி.மு.க., அரசு துரோகம்: அன்புமணி
பழைய ஓய்வூதியம்: தி.மு.க., அரசு துரோகம்: அன்புமணி
ADDED : நவ 21, 2025 11:51 PM

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., அரசு கூறியுள்ளது. இதன் வாயிலாக, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படாது என, தெரிவித்துள்ளது; அரசு ஊழியர்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது.
மேலும், கடந்த 2003 ஏப்ரலுக்கு பின் பணியில் சேர்ந்து, அக்., வரை ஓய்வு பெற்ற, 54,000 பேரில் 51,000 பேருக்கு, முழுமையான பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. இது அப்பட்டமான பொய். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், கடந்த அக்., வரை 54,000 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு கூட, ஓய்வூதியம் வழங்கவில்லை. ஆட்சிக்கு வர காரணமாக இருந்த, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இதை விட மோசமான துரோகத்தை, தி.மு.க., வால் செய்ய முடியாது.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,

