
அக்டோபர் 29, 1988
கர்நாடக மாநிலம், மங்களூரு கலெக்டராக இருந்த ஆனந்தய்யா தாரேஷ்வர் -- கிரிஜாம்மா தம்பதியின்மகளாக, 1903, ஏப்ரல் 3ல் பிறந்தவர்,கமலாதேவி சட்டோபாத்யாய்.இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற எம்.ஜி.ரானாடே, கோபால கிருஷ்ண கோகலே, அன்னி பெசன்ட் ஆகியோரால், விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.
தன் 14வது வயதில் திருமணம் செய்து, 16 வயதில் விதவையானார். சென்னை ராணிமேரி கல்லுாரியில் படிக்க வந்து, சரோஜினி நாயுடுவின் தோழியாகி, அவரது சகோதரர் ஹரீந்திரநாத்சட்டோபாத்யாயை மறுமணம் செய்தார். காந்தியின்அழைப்பால், 'ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம்' உள்ளிட்டவற்றில் பெண் அணிக்கு தலைமையேற்றார்.
பாகிஸ்தான் பிரிவினை கலவரத்தின்போது, ஹரியானாவின் பரிதாபாதில், 50,000 பேருக்கு மருத்துவ உதவியும், உணவும் அளித்தார். இந்திய கைவினை பொருள் வாரியம், கைவினை கவுன்சில், தேசிய நாடகப் பள்ளிகளை நிறுவ பாடுபட்ட இவர், 1988ல் தன் 85வது வயதில், இதே நாளில் மறைந்தார்.

