sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : பிப் 17, 2024 09:38 PM

Google News

ADDED : பிப் 17, 2024 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1836, பிப்ரவரி 18

மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், காமர்புகூரில், சட்டர்ஜி - சந்திரமணி தம்பதிக்கு மகனாக, 1836ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர், காதாதர் சட்டர்ஜி என்ற ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இவர் சிறுவனாக இருந்தபோது, தந்தையின் மரணத்தை கண்டார். அது ஏற்படுத்திய மனநல பாதிப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளான இவர், அத்வைத வேதாந்தத்தை, தோத்தாபுரி என்பவரிடம் கற்றார். தனக்காக, சாரதாமணி என்ற பெண் பிறந்துள்ளதை ஆழ்மன சக்தியால் உணர்ந்து, அவரை மனைவியாக்கினார்.

இவர், கோல்கட்டாவில் உள்ள தட்சணேஸ்வரர் காளி கோவிலின் அர்ச்சகர் பணியை செய்தார். அப்போது, அவருக்கு ஆன்மிகம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்தன. இரவில், பஞ்சவடி என்ற காட்டுப் பகுதியில் காளியை எண்ணி தியானித்தார்.

காளி காட்சி தராததால், தற்கொலைக்கு முயன்ற போது, மயக்கமடைந்து, பேரானந்த ஒளியால் சூழப்பட்டதாக பின் குறிப்பிட்டார். விவேகானந்தர் உட்பட பல சீடர்களை உருவாக்கிய இவர், 1886 ஆகஸ்ட் 16ல், தன், 50வது வயதில் மறைந்தார்.

இன்றும் ஆன்மிகம், கல்வி பணிகளில் ஈடுபட்டு வரும் ராமகிருஷ்ணா அறக்கட்டளைக்கு வித்திட்டவர் பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us