திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4200க்கு விற்பனை
திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4200க்கு விற்பனை
ADDED : டிச 31, 2024 12:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வரத்துக்கு குறைந்ததால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4200க்கு விற்பனையானது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு வேடசந்தூர் தாடிக்கொம்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் டன் கணக்கில் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்தது.
விலை விவரம்;
மல்லிகை பூ ரூ.4200.
முல்லை பூ ரூ.1100
கனகாம்பரம் ரூ.1000
ஜாதிப் பூ ரூ.800.
காக்கரட்டான் ரூ.750.
அரளி பூ ரூ.300.
பட்டன் ரோஜா ரூ.300.
ரோஜா கட்டு ரூ.300.