வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 21, 2025 09:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்; காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது.
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக திமுக அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்.
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து 'முன் செல்லடா...' என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழகத்துக்கு அர்ப்பணித்துள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

