தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அமைச்சர்கள் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அமைச்சர்கள் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அமைச்சர்கள் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்


ADDED : நவ 01, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தமிழ்நாடு நாள்’ விழாவில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் பேச்சுக்கு, தி.மு.க., --– பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக அரசின் சார்பில், ‘தமிழ்நாடு நாள் விழா’ இன்று (நவ.,1) கொண்டாடப்பட்டது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ‘‘தமிழகத்திற்கென, தனிக் கொடியை உருவாக்க வேண்டும்; மாநில கொடியை முதல்வர் விஜய் கையால் ஏற்ற வேண்டும்,’’ என்றார். அதே நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு, 5 கோடி ரூபாய் தருவதாக ஒருவர் என்னிடம் பேரம் பேசினார். 500 கோடி ரூபாய் கொடுத்தாலும், கொடுக்க முடியாது என்று தெரிவித்தேன்,’’ என்றார்.

அமைச்சர்களின் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

* தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: தமிழ்நாடு கொடி தொடர்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது தேவையில்லாத ஒன்று. தேசியக் கொடியே இந்திய ஒருமைப்பாட்டின் சின்னம். மாநிலங்களால் உருவாக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், மாநிலங்களுக்கென கொடி உண்டு. ஆனால், இந்தியா தனது நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியது என்பதை, ஆதவ் அர்ஜுனா தெரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு, ஒருவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதை அமைச்சர் கூறுகிறார். ஒரு பொறுப்புள்ள அமைச்சர் செய்யும் காரியமா இது. ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வழங்க முயற்சித்த நபர் மீதும், இடைத்தரகராக செயல்பட்ட லயோலா மணி மீதும், வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டாமா. லஞ்சம் வாங்குவதும் குற்றம், வழங்குவதும் குற்றம் என, அமைச்சருக்கு தெரியுமா, தெரியாதா?

* தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி: அமைச்சர் ராஜ்மோகனுக்கு, யாரோ ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதால், அதை அமைச்சரிடம் கொண்டு சென்ற லயோலா மணி கூட்டு சதிகாரர் ஆகிறார். ஊழல் தடுப்பு சட்டத்தின்படி, லஞ்சம் கொடுப்பதும், கொடுக்க முயல்வதும், கிரிமினல் குற்றம் தானே. அரசு பொறுப்பில் உள்ள லயோலா மணியோ, அமைச்சர் ராஜ்மோகனோ, இது குறித்து ஏன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம், எந்தப் புகாரும் அளிக்கவில்லை. லஞ்சம் கொடுக்க வந்த அந்த உண்மையான குற்றவாளியை, அமைச்சரும், லயோலா மணியும், இன்னமும் பாதுகாத்து பதுக்குவது ஏன்?

* முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம். பதவிக்காக ஒருவர் 5 கோடி ரூபாய், லயோலா மணி வழியே பேரம் பேசியதாக, அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். பதவிக்காக 5 கோடி ரூபாய் வழங்க முன்வந்தது யார். அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அந்த நபர் யார் என்பதை முதல்வர் விஜய், நாட்டு மக்களிடம் அடையாளம் காண்பித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us