உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 27, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
மாணவர் நலன் தவிர, எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை, செயலால் செய்து காட்டியுள்ளார் பிரதமர் மோடி. 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவிற்காக, அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவின. தேச, பாதுகாப்பிற்கு எதிரான முழக்கங்கள் ஒலிக்க தொடங்கின.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கின. அதன் விளைவாகவே, அமைதி போராட்டம் அலங்கோல கலவரமாக உருவெடுத்தது. எனவே, தேச ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும், தன் மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் துறந்துள்ளார். இதன் பெயர் தோல்வியல்ல, தார்மீகம். 'நீட்' விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
