பட்ஜெட் தாக்கல் முடியும் வரை எதிர்க்கட்சிகள் பங்கேற்பு
பட்ஜெட் தாக்கல் முடியும் வரை எதிர்க்கட்சிகள் பங்கேற்பு
ADDED : மார் 15, 2025 11:47 PM
சென்னை:வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்யாமல் முழுமையாக பங்கேற்றனர்.
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் உரையை வாசிக்கும் போது, 'சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து வலியுறுத்தினார். அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களை தொடர்ந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் களும் சபையில் இருந்து வெளியேறினர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று சட்டசபையில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், 5வது ஆண்டாக தாக்கல் செய்யப்பட்டது. காலை, 9:30க்கு துவங்கிய பட்ஜெட் உரையை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சரியாக பகல், 11.11 மணிக்கு நிறைவு செய்தார்.
இதில் பங்கேற்பதற்காக சபைக்கு காலை 9:28 மணிக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முழுமையாக சபையில் அமர்ந்திருந்தனர். பன்னீர்செல்வமும் இறுதி வரை சபையில் அமர்ந்திருந்தார்.