'தி.மு.க.,வுக்கான எதிர்ப்பு எங்களுக்கு தான் சாதகமாகும்'
'தி.மு.க.,வுக்கான எதிர்ப்பு எங்களுக்கு தான் சாதகமாகும்'
ADDED : பிப் 15, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடியில் அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் வியூகம் வகுத்து வருகிறோம். கூட்டணி குறித்த நல்ல தகவலை விரைவில் தெரிவிப்போம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது.
போதைப் பொருள் விற்பனை தங்கு தடையின்றி நடக்கிறது. கொலை, கொள்ளை எல்லை மீறி நடந்து வருகிறது. சொத்து வரி, வீட்டு வரி உயர்வு, குடிநீர், பால், பஸ் கட்டண உயர்வால் மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். இந்த எதிர்ப்பு, வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக கவர்னர் உரையில், தமிழக அரசு பொய் மூட்டையை கட்டி சாதனை என்று சொல்லி உள்ளது. இதைத்தான் எங்கள் பொதுச்செயலர், உப்பு சப்பு இல்லாத உணவு பண்டம் என்றார்.
இவ்வாறு கூறினார்.