கேரளாவில் இன்று இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ஆறு மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்
கேரளாவில் இன்று இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ஆறு மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்
ADDED : ஜூன் 18, 2025 01:52 AM
மூணாறு, ஜூன் 18--
கேரளாவில் இன்று  இரண்டு மாவட்டங்களுக்கு மழைக்கான 'ஆரஞ்ச்', ஆறு மாவட்டங்களுக்கு ' எல்லோ'  அலர்ட்டுகளை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
கேரளாவில் பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்து பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தற்போது அதன் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மட்டும் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
அதன்படி இன்று (ஜூன் 18) கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' , ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுத்தது. நாளை ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.4 மி.மீ., வரையும், எல்லோ அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மி.மீ., வரை மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

