தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உதயநிதி மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு

உதயநிதி மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு

உதயநிதி மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு


UPDATED : அக் 26, 2026 08:18 PM

ADDED : அக் 26, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 08:18 PM ADDED : அக் 26, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி, உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்தார். அப்போது, உதயநிதி தரப்பில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 45 நாட்கள் அவகாசத்துக்குள், இந்த தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

தேர்தல் வழக்கு தாக்கல் செய்த மிலானி தரப்பில், ‘குறித்த காலக்கெடுவுக்குள் தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற பதிவுத்துறை ஏற்றுள்ளதால், வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்’ என, வாதிடப்பட்டது.

இந்த மனு, நீதிபதி ஜி.அருள்முருகன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, உதயநிதி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us