துாய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க உத்தரவு
துாய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க உத்தரவு
ADDED : ஆக 22, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'வார விடுப்பை தவிர, மற்றொரு நாள் விடுப்பு எடுத்தால், கிராமப்புற துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும்' என, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணியில், 'அவுட்சோர்சிங்' அடிப்படையில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் வாயிலாக, துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
துாய்மை பணியாளர்களுக்கு, விடுமுறை குறித்து கோரிக்கை வந்துள்ளது. அவர்கள் சுழற்சி முறையில், வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம்.
அதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுத்தால், ஒரு நாள் ஊதியமாக, 160 ரூபாயை பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

