ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகார் பெட்டி வைக்க உத்தரவு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகார் பெட்டி வைக்க உத்தரவு
ADDED : செப் 28, 2023 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டிகளை நிறுவ வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் தி.சி.செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, துணை சுகாதார இயக்குனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
நாள்தோறும் லட்சக்கணக்கானோர் சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகப்பு பகுதியில், முக்கிய இடத்தில் புகார் பெட்டிகளை நிறுவ வேண்டும்.
மருத்துவ அலுவலர் அதனை கண்காணித்து புகார் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும். உரிய நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுத்து குறைகளை களைதல் அவசியம். அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களும், புகார் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

