விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : செப் 28, 2025 06:26 AM

சென்னை: ''விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி, அவர்களை ஏற்றுமதியாளராக உருவாக்குவதே எங்கள் நோக்கம்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வேளாண் துறை சார்பில், 'வேளாண் வணிகத் திருவிழா - 2025' சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது. இரண்டு நாள் திரு விழாவை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
காசோலைகள் விவசாயிகளுக்கு, 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், மாநில அளவில் கேழ்வரகு மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் பிடித்த இரு விவசாயி களுக்கு, தலா 2.5-0 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, முதல்வர் பேசியதாவது:
விவசாயிகளுக்கு நேரடி சந்தை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இத்திரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய சாகுபடி முறை மற்றும் வேளாண் வணிக வாய்ப் புகள் குறித்து அறிய, ஒரு சிறந்த முயற்சி.
இதனால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள் உருவாவதுடன், ஏற்றுமதியும் அதிகரிக்கும். நாங்கள் பொறுப்பேற்ற பின், விவசாயிகளிடம் கருத்து கேட்டு, திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால், வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.
நடப்பாண்டு, 14 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 1.28 லட்சம் ஏக்கர் கூடுதலாகும்.
விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை செயல்படுத்துவதால், கடந்த நான்கு ஆண்டுகளில், 456.44 லட்சம் டன் உணவு தானிய பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன.
மூன்றாமிடம் கடந்த நான்கு ஆண்டில் பயிர் சாகுபடியில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும்; குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் உள்ளோம். இதிலும், நாம் முதலிடம் வர வேண்டும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, 47,000 ஏக்கர் தரிசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகளை தொடர்ந்து, இத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி, புதிய ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள், நேரு, பன்னீர்செல்வம், அன்பரசன், செழியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.