ADDED : மார் 12, 2024 01:39 AM
சென்னை: சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அ.தி.மு.க., பொதுச்செயலரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி நேற்றிரவு வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'லோக்சபா தேர்தலை கருதி, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக, சி.ஏ.ஏ.,வை, மத்திய பா.ஜ., அரசு அமல்படுத்தி உள்ளது.
'இதை, அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டத்தை முஸ்லிம்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்க மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெளியிட்ட அறிக்கையில், 'பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் குடியுரிமை திருத்த சட்டம் ஏற்கத்தக்கது அல்ல.
'தமிழகத்தில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என, ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்' வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

