ADDED : ஜூலை 17, 2025 02:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் பிற மாநிலங்களை விட கல்வியில் மேம்பாடு அடைந்துள்ளது. பல மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கல்வி பயில, தமிழகம் வருகின்றனர். மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்படும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி அமைக்கப்படுவதை வரவேற்கிறேன். முன், பின் என்ற வரிசை மாணவர்களிடையே பாகுபாடு உணர்வை வளர்க்கிறது. அனைத்து நிலையிலும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை தான், இந்த மாற்றத்திற்கு காரணம்.
தி.மு.க., கூட்டணி மீது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு அச்சம். இல்லையெனில், தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே ஏன் பிரசாரத்தை அவர் துவக்க வேண்டும்.
- திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்

