ADDED : ஜூலை 30, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில் சசிகலா வந்தால், உங்கள் நிலைப்பாடு என்ன என்று யூகமாக கேள்வி எழுப்புகிறீர்கள். அந்த யூகத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.
தேர்தலுக்கு இன்னும், எட்டு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளது. பா.ஜ.,வுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தல் அறிவித்த பின், கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என்பதை தெளிவாக அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.