ADDED : ஜூலை 15, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; 'அரைவேக்காட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு, ஹிந்து அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
படி படி என்கிற திராவிடத்தில் கிளை விட்டு விட்டு, படிக்காதே என தடுக்கும் காவி கூட்டத்துக்கு கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழக மாணவர்களின் உணர்வை, கோவையில் பதிலாக சொல்லி இருக்கிறது, தி.மு.க., மாணவர் அணி.
அரைவேக்காட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு ஹிந்து அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை. கடந்த கால அ.தி.மு.க., ஆட்சிகளிலும், கோவில் நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை. ஆனால், தமிழக மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதை கொச்சைப்படுத்தியோ பேசினால், உங்களை ஓட ஓட விரட்டும் எங்கள் கூட்டம்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.