ADDED : ஆக 04, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை; முகவரியை தேடிக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார். பழனிசாமி வசிக்கும் சேலத்தில், வரும் 18ல் இ.கம்யூ., பேரணி நடக்க உள்ளது. தன் சுற்றுப்பயணத்தை அன்றைய தினம் ஒத்தி வைத்துவிட்டு, எங்கள் பேரணியை பார்க்க அவர் வரவேண்டும்.
அதன் பிறகாவது எங்கள் கட்சி எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமியை அமித் ஷா வளைத்து பிடித்திருந்தாலும் , பா.ஜ.,வால் தமிழகத்தில் ஒருபோதும் காலுான்ற முடியாது.
- முத்தரசன்
மாநில செயலர், இந்திய கம்யூ.,