பழனிசாமியின் 4ம் கட்ட பிரசாரம் செப்., 1ல் மதுரையில் துவக்கம்
பழனிசாமியின் 4ம் கட்ட பிரசாரம் செப்., 1ல் மதுரையில் துவக்கம்
ADDED : ஆக 23, 2025 02:20 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் நான்காம் கட்ட பிரசார பயணத்தை, வரும் செப்டம்பர் 1ம் தேதி, மதுரையில் துவங்குகிறார்.
கடந்த ஜூலை 7 முதல் தொகுதி வாரியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை, 100க்கும் அதிகமான தொகுதிகளில், பிரசார பயணத்தை முடித்துள்ளார்.
மூன்றாம் கட்ட பயணத்தை, வரும் 25ம் தேதி, ஸ்ரீரங்கத்தில் நிறைவு செய்கிறார். அதைத் தொடர்ந்து, நான்காம் கட்ட பிரசார பயணத்தை, செப்டம்பர் 1ம் தேதி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் துவங்குகிறார்.
இதையடுத்து, செப்., 2ம் தேதி, மேலுார், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு; 3ம் தேதி, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு; 4ம் தேதி, சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி; 5ம் தேதி, கம்பம், போடிநாயக்கனுார், பெரியகுளம்; 6ம் தேதி, நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை; 7ம் தேதி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய தொகுதிகளுக்கு செல்கிறார்.
அதன்பின், செப்., 9ல் கோவை மாவட்டம் தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு; 10ம் தேதி, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை; 11ம் தேதி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம்; 12ம் தேதி, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம்; 13ம் தேதி கோவை மாவட்டம் சிங்காநல்லுார், சூலுார், அவினாசி ஆகிய சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
மா.செ.,க்கள் கூட்டம் அ.தி.மு.க., நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், வரும் 30ம் தேதி காலை 10:30 மணிக்கு, கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என கூறப்பட் டுள்ளது.