கொள்ளையடித்ததை பாதுகாக்க பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டணி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கு
கொள்ளையடித்ததை பாதுகாக்க பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டணி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கு
ADDED : நவ 21, 2025 07:40 AM

கோவை: ''அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி கோரி, திட்ட அறிக்கை சமர்ப்பித்து, 15 மாதமாகி விட்டது. தமிழகத்துக்கு மட்டும் அற்ப காரணங்கள் கூறி, நிராகரித்திருக்கின்றனர்.
கடந்த 2011 மக்கள் தொகையை சொல்கிறார்கள்; 14 ஆண்டுகள் மக்கள் தொகை வளர்ச்சியை கணக்கில் கொள்ளாமல் குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் எந்த மாநிலங்களில் மெட்ரோவுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் நிராகரிக்கப்பட்டதன் நோக்கம் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையே காரணம்.
கடந்த லோக்சபா தேர்தலில், அவர்கள் கணக்கு ஜீரோவாக இருந்தது. இதே கணக்கு சட்டசபை தேர்தலிலும் இருக்கும். இது, அ.தி.மு.க.,வுக்கும் பொருந்தும். அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவே பா.ஜ.வுடன் அ.தி.மு.க., பொது செய லாளர் பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

