தேவர் நினைவிட பூஜாரிக்கு 'பளார்' ஸ்ரீதர் வாண்டையார் ஆத்திரம்
தேவர் நினைவிட பூஜாரிக்கு 'பளார்' ஸ்ரீதர் வாண்டையார் ஆத்திரம்
ADDED : அக் 31, 2025 01:12 AM

கமுதி:  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று மரியாதை செலுத்த வந்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது நேரம் காத்திருக்குமாறு, அங்கிருந்த பூஜாரி அவரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், பூஜாரியின் கன்னத்தில் அறைந்தார்.
மேலும், நினைவிடத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  அப்போது, அங்கு வந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர், ஸ்ரீதர் வாண்டையாரை சமாதானப்படுத்தினர்.  அதன்பின் அவர் புறப்பட்டு சென்றார்.
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இருந்த பூஜாரியை, கன்னத்தில் அறைந்த மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார். இடம்: பசும்பொன், ராமநாதபுரம்.

