பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர்: பிரேமலதா
பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர்: பிரேமலதா
ADDED : மார் 29, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'ராமேஸ்வரம், புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை, பிரதமர் மோடி, ஏப்., 6ல் திறந்து வைக்கிறார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க பாலம்.
இப்பாலத்திற்கு, ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து, அவ்வூரின் அடையாளமாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இது, ரம்ஜான் விரதம் இருக்கும் முஸ்லிம்களுக்கு கவுரவம் மற்றும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.