ADDED : ஜூலை 09, 2025 01:55 AM

சென்னை: “விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன்,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
கடலுார் ரயில் விபத்தில் குழந்தைகள் இறந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு, ஆழந்த இரங்கல். பழனிசாமியின் சுற்றுப்பயணம் எப்படி இருக்கிறது என்பதை, மக்களும் கட்சியினரும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். இருந்தபோதும், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று, அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது. அதனால், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க முடிவெடுத்துள்ளேன். விரைவில், அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன். பொறுமையாக செய்தாலும், எதையும் பொறுப்புடன் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.