ADDED : பிப் 08, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் பயன்படுத்த, 72,000 டன் நிலக்கரி தேவை. ஆனால், தினமும் சராசரியாக, 60,000 டன் தான் கிடைக்கிறது.
திருவள்ளூர் மற்றும் துாத்துக்குடியில், 4,100 மெகா வாட் திறனில் நான்கு அனல் மின் நிலையங்களை, மின்வாரியம் அமைத்து வருகிறது. அவற்றில் எரிபொருளாக பயன்படுத்தவும் நிலக்கரி தேவை.
இதனால், மின் வாரியத்திற்கு நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே, ஒடிசாவில் உள்ள சகிகோபால் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்கும் பணியில், தமிழக மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

