ADDED : ஜூலை 22, 2025 12:33 AM
கிட்னி விற்பனை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க, பா.ம.க., - இ.கம்யூ., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட கட்சியினர் அடுத்தடுத்து, பள்ளிப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரில் கூறியிருப்பதாவது: விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி கிட்னி பெற்று மோசடி செய்துள்ளனர்.
போதிய வருவாய் இல்லாததால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களுக்கும், கந்து வட்டி நிறுவனங்களின் நெருக்கடியுமே, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது. கிட்னி விற்பனை தொடர்பாக சட்ட விரோதமாக செயல்பட்டுள்ள விற்பனையாளர்கள், புரோக்கர்கள், இந்த சம்பவத்திற்கு காரணமாக உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என, அனை வரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

