
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் இளைய மகன் மணி என்ற மணிமன்றவாணன், 78. இவர் உடல் நலக்குறைவால், சென்னை மேற்கு கலைஞர் நகரில் உள்ள அவரது வீட்டில், நேற்று மாலை, 4:30 மணிக்கு இயற்கை எய்தினார். இவர் பாவாணரின் இறுதி காலம் வரை, அவரது தமிழ் பணிகளுக்கு துணையாக இருந்தார்.
பாவாணரின் மறைவுக்கு பிறகு, தமிழக அரசு இதழான, 'தமிழரசு' மாத இதழில், பதிப்பாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை, 'பாவாணர் நினைவலைகள்' என்ற பெயரில் எழுதி நுாலாக வெளியிட்டார்.
இவருக்கு, இமானுவெல் தேவநேயன் என்ற மகன் உள்ளார். மணியின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மணிமன்றவாணன் இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.