ADDED : ஜன 12, 2026 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் முழுதும் பணியாற்றும், 12,500-க்கும் அதிகமான ஊராட்சி செயலர்கள், தங்கள் ஊதிய விகிதத்திற்கு ஏற்ப, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலர்களின் போராட்டம் நடப்பதால், கிராமங்களில், அடிப்படை பணிகள் நடக்காமல், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, குடிநீர் வினியோகம், தெரு விளக்கு, சொத்து வரி வசூல், கட்டட அங்கீகாரம், சுகாதாரம் உட்பட, பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. இந்த முக்கிய பிரச்னையை, தி.மு.க., அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமில்லை. ஊராட்சி செயலர்களை, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்ற கிராம ஊராட்சி செயலர்களுக்கு, ஓய்வூதியமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும்.
- வாசன், தலைவர், த.மா.கா.,

