அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மக்கள் தயார்: பழனிசாமி
அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மக்கள் தயார்: பழனிசாமி
ADDED : பிப் 24, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மக்கள் தயாராகி விட்டனர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள, கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, 19 சதவீதம் உயர்த்தி,ஒரே கையெழுத்தில் கொண்டு வந்தவர்எம்.ஜி.ஆர்.,
இடஒதுக்கீடு, 50 சதவீதமாக குறைய இருந்த சூழ்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின், ஒன்பதாவது அட்டவணையில், 69 சதவீத இடஒதுக்கீட்டை வெளியிடச் செய்து, சமூக நீதியைகாத்தவர் ஜெயலலிதா.
இப்படி தமிழக மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்கள் அந்த தலைவர்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.