தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கர்நாடக முதல்வர் சிவக்குமார் மீது வழக்கு தொடர வேண்டுக்கோள்

கர்நாடக முதல்வர் சிவக்குமார் மீது வழக்கு தொடர வேண்டுக்கோள்

கர்நாடக முதல்வர் சிவக்குமார் மீது வழக்கு தொடர வேண்டுக்கோள்


UPDATED : நவ 10, 2026 10:54 AM

ADDED : நவ 10, 2026 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:54 AM ADDED : நவ 10, 2026 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: ‘மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. கர்நாடகா தன் சொந்த நிலத்தில் அணை கட்டிக்கொள்ள சுபரீம் கோர்ட் அனுமதி வழங்கி விட்டது’ என, கர்நாடகா முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ள கருத்துக்கு, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பாண்டியன் கூறியதாவது:

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் மேகதாது பகுதியை பார்வையிட்டது சட்டத்திற்கு புறம்பானது. மத்திய அரசிதழில் வெளியிட்ட நாளிலிருந்து, 15 ஆண்டுகளுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்ட அடிப்படையில், எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதை சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆனால், கர்நாடக முதல்வர் சிவக்குமார், தமிழகம் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது அணை கட்ட, சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியதாக செய்யும் பொய் பிரசாரம் கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்.

முதல்வர் சிவக்குமார் மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். தமிழக முதல்வர் விஜயின் கடிதத்தின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021ல், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம், தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, மேகதாது அணை கட்டுவதற்கு தடை விதித்தது.

அந்த தடையை நீக்குவதற்கு அதிகாரம் இல்லாத, தேசிய பசுமை தீர்ப்பாயம், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை, தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு பிறகு நீக்கியது.

இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர, விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தினோம். ஆனால், தி.மு.க., அரசு ஏற்க மறுத்து விட்டது. தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை உறுதிப்படுத்தி இருந்தால், மேகதாது அணைக்கட்ட கர்நாடக அரசு வரைவுத்திட்ட அறிக்கை கூட தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லணை கால்வாய் உழவர்கள் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன் கூறியதாவது:

மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதல்வர் விஜய், அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தை நடத்தி, கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எதிராக நீதிமன்றத்தை நாட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சி மவுனமாக இருப்பது, கர்நாடகவுக்கு ஆதரவாக இருப்பதாக தோன்றுகிறது. முதல்வர் விஜய், மேகதாது அணை விவகாரத்தில், மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us