ADDED : அக் 30, 2025 01:36 AM
சென்னை: தென் மாவட்டங்களில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிய மனுவை, கோவையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனிடம், தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அளித்தனர்.
இது குறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
மதுரை - துாத்துக்குடி இடையே, 150 கி.மீ., துாரம் உள்ள வழித்தடத்தை, தொழில் வழித்தடம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்து, பல ஆண்டுகள் ஆகியும் எந்த தொழிற்சாலையும் வரவில்லை.
மதுரையை அடுத்துள்ள அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் பகுதியில், மத்திய அரசின் சார்பில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
இவை உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டது. அவர், டில்லி சென்றதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

