/
செய்திகள்
/
தமிழகம்
/
சினிமா வாய்ப்பு தருவதாக பாலியல் வன்கொடுமை செய்வோரை சமூகத்தில் இருந்து களைய வேண்டும் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி

ADDED : நவ 28, 2024 01:15 AM
சென்னை:சென்னையைச் சேர்ந்த, 13, 14 வயது பள்ளி மாணவியர் இருவர், 2020ல் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினர். இதில் ஒரு மாணவி, தன் ஆண் நண்பரான, சென்னை வடபழனியை சேர்ந்த மணி என்ற இம்மானுவேல்,27 என்பவரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
அங்கு வந்த மணி, தன் நண்பர் தினேஷ், 26 என்பவரை அழைத்து சென்றுள்ளார். பின், அவர்கள் வடபழனி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு மினி ஹாலின் பின்பகுதிக்கு மாணவியரை அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின், தினேஷ் இரு மாணவியரையும், தன் வீட்டுக்கு அழைத்து சென்று, வெவ்வேறு அறைகளில் தங்க வைத்துள்ளார். அங்கு தினேஷ், அவரது உறவினரான விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர்,46 ஆகியோர், மாணவியரை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் விட்டு சென்றனர்.
வீடு திரும்பிய மாணவியர் நடந்த சம்பவம் குறித்து, பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
ஆசை வார்த்தை
மாணவியரின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, மணி, தினேஷ், சங்கர், சிவா, ராஜேந்திரன், வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது.
போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர், சினிமா துறையில் இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக, இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இவரை போன்றவர்களால் தான், பல குழந்தைகள் சமூகத்தில் சீரழிக்கப்படுகின்றனர்.
வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியரை மது அருந்தவும், புகை பிடிக்கவும் பழக்கப்படுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளனர்.
பாலியல் சீரழிவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, இதுபோன்ற நபர்களை சமூகத்தில் களையெடுக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வழக்கில் மணி, தினேஷ், சங்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.
தலா ஒரு லட்சம்
எனவே, மணி, தினேசுக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா 10,000 ரூபாய் அபராதம்; சங்கருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 35,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீடாக தமிழக அரசு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.